Thursday, February 18, 2010

எனது கானங்கள்

சில பாடல்கள் கேட்கும்போது காதில் தேன்பாயும்...அத்தோடு சரி...சில பாடல்கள் கேட்கும்போது மனதை வருடிச்செல்லும்...ஒன்று இரண்டு பாடல்கள் தான் உயிரை தொட்டு செல்லும் தன்மையுடையன...அவ்வாறு உயிரைத்தொட்டுச்செல்லும் பாடல்களைத்தருவதில் என் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் இசைஞானிதான்.இந்தப்பாடலும் அவ்வாறு உயிரைத்தொட்டுச்செல்லும் பாடல்களில் ஒன்று...

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை நான் பார்த்ததில்லை.பாடல் எச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது என்பதும் எனக்கு தெரியவில்லை...ஆனாலும் அது என்னவோ தெரியவில்லை..."ஓ..ஜனனி....என் ஸ்வரம் நீ "என்ற அந்த ஒற்றை வரியைக்கேட்டதுமே என் உயிர் உருகிக்கரைந்துவிடும்.... பாடல் இசைக்கத்தொடங்கும்போது கூட்டை விட்டு வெளியேறும் உயிர் பாடல் ஒலித்து ஓயும் வரை திரும்பிவர மறுத்துவிடும்.காரணம் இசைஞானியின் உயிரை உருக்கும் மெட்டு என்றே நான் கருதுகிறேன்......வாலிபக்கவிஞர் வாலியின் அர்த்தம் பொதிந்த ஆழமான வரிகள் இசைஞானிக்கு அடியெடுத்துக்கொடுக்கிறது.

"மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது பாதைகள் கேளடி.....பாதை இல்லாத யாத்திரை மேகம் இல்லாத வான்மழை ஏதடி..."என்று நாயகன் கேள்வியோடு முடிக்கும்போது இல்லை என்று பதில் சொல்வது போல் இசைஞானி ஒரு புல்லாங்குழல் இசை(எனக்கு தெரிந்தவரை அது புல்லாங்குழல் தான்..:)) கொடுத்திருப்பார் பாருங்கள்....அற்புதமாக இருக்கும்...
எஸ்.பி.பி.இன் குரலை ஒத்த குரலுக்குரியவர் பாடகர் மனோ.எஸ்.பி.பி பாடிய எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலான பாடல்களைப்பாடியிருந்தாலும் அத்தனையும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் என்பதற்கு இந்தப்பாடலே பெரிய சான்று...
சோகமான பாடல்களில் ஒரு சுகம் இருக்கும் என்று சொல்வார்கள்.இந்தப்பாடலும் அப்படித்தான்.....



இசைஞானிக்கு அடுத்ததாக நான் வெகுவாக இரசிப்பது தேனிசைத்தென்றல் மற்றும் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களின் இசையை தான்..."உன்னைக்கொடு என்னைத்தருவேன்"படத்துக்காக இடம்பெற்ற இப்பாடலையும் அதன் அருமையான இசைக்காகவும் மனதைக்கவரும் எளிமையான பாடல் வரிகளுக்காகவும் நான் வெகுவாக இரசித்திருக்கிறேன்.....

பொதுவாக எந்த ஆணுமே தனக்கு வரப்போகின்றவள் தனக்கு இரண்டாவது அன்னையாக இருக்கவேண்டுமென்றே எதிர்பார்ப்பான்.பெண்களும் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல.தனக்கு கணவனாக வரப்போகின்றவனை தனது பிள்ளையாக தனது தாயாக என்று ஒவ்வொரு அவதாரத்தில் பார்க்கவே விரும்புவாள்.அந்த உணர்வு வெளிப்பாடு இந்தப்பாடலிலும் இருக்கிறது...

"காற்றில் தூசும் வந்து உந்தன் கண்ணில் பட்டால் பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்....
வெயில் காலம் வந்தால் கண்ணின் இமைகள் இரண்டை உனக்காக குடையாக மாற்றுவேன்..."

இந்த வரிகளில் கவிஞரின் கற்பனைக்குதிரை எங்கள் உள்ளத்தையும் சேர்த்து இழுத்துச்சென்றுவிடுகிறது...

பாடலின் ஒவ்வொரு வரிகளும் எனக்கு பிடித்தமானவையே..அதிலும் "என்னைக்கிள்ள எனக்கே தான் சம்மதங்கள் தரமாட்டாய்" என்ற வரியை சிறு சிணுங்கலுடன்(சின்ன சிரிப்புடன்) சின்னக்குயில் பாடி முடிப்பது மிகவும் இரசிக்கும்படியாக இருக்கிறது...

பாடலுக்கு மகுடம் வைப்பதுபோல உன்னிகிருஷ்ணன்,சித்ராவின் ஜோடிக்குரல்கள்.....கேட்பவர்களைக்கவர்ந்திழுப்பதில்
எந்த அதிசயமும் இல்லை.




இசைஞானியின் அருமையான வார்ப்புக்களில் இந்தப்பாடலும் ஒன்று....காதல்,வெறுப்பு,தவிப்பு,சோகம் போன்ற எல்லா உணர்வுகளையும் கடந்து என்னை மறந்து எப்போதுமே நான் இரசிக்கும் பாடல் இது..இயற்கையைப்பற்றி நிறையப்பாடல்கள் வந்திருந்தாலும் இந்தபாடலில் எனக்கு எப்போதுமே ஒரு தனிப்பிரியம் உண்டு.கவிஞரின் கற்பனை வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் இரசிக்கும்படியாகவே இருக்கிறது...இருந்தாலும் என்னை கொள்ளை கொண்ட வரிகள் இவையே....

"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டி குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்..."

பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை,கேட்கும்போது காதில் பாலும் தேனும் கலந்து பாய்கிறது.பாடலைப்பற்றி நான் குறிப்பிடாத குறிப்பிட அவசியமில்லாத விடயம் ஒன்று இங்கே இருக்கிறது..ஆம்..மணி மகுடம் வைத்தது போல வரும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரல் தான் அது..

TamilWire.com - Vanna Vanna Pookal - Ila Nenje Vaa .mp3
Found at bee mp3 search engine
Tamilish

13 comments:

புல்லட் said...

பாடல்களை விட உங்கள் கருத்துரை நன்றாக இருக்கிறது.. தமிழிஸ் , தமிழ்மணம் மற்றும் யாழ்தேவிப்பட்டைகளை இணையுங்கள்.. உங்கள் எழுத்து பலரை சென்றடைய உதவும்.. :) வாழ்த்துக்கள்

word verification ஐ எடுத்து விடுங்கள்

ஆதிரை said...

//தமிழிஸ் , தமிழ்மணம் மற்றும் யாழ்தேவிப்பட்டைகளை இணையுங்கள்.. உங்கள் எழுத்து பலரை சென்றடைய உதவும்..//

றிப்பீட்டு.. :-)

வாழ்த்துக்கள்.

தாருகாசினி said...

மிக்க நன்றிகள் புல்லட் ....ஆலோசனைக்கும் நன்றிகள்...வலைப்பதிவில் இப்போது தான் அரிச்சுவடியில் நிற்கிறேன்....உங்களிடமிருந்து தேரிந்துகொள்ள நிறைய இருக்கிறது என்று நம்புகிறேன்....:)

தாருகாசினி said...

ஆதிரை உங்களுக்கும் நன்றிகள்....ஆலோசனை கேக்க எண்டு இனி உங்களையும் அடிக்கடி அலுப்படிக்க வேண்டி வரும்... ..கவனம்....:)

மயூ மனோ (Mayoo Mano) said...

nice...

தாருகாசினி said...

வருகைக்கு நன்றி நதியானவள் :)

கருணையூரான் said...

வாழ்த்துக்கள்...தொடர்ந்து உங்கள் பதிவுகளோடு இணைந்திருப்போம்..

தாருகாசினி said...

மிக்க நன்றிகள் கருணையூரான்.....உங்களையும் நான் பின்தொடர ஆரம்பித்திருக்கிறேன்....

அண்ணாமலையான் said...

நல்லா எழுதறீங்க... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்க....

தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணாமலையான்...:)

vidivelli said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
செம்பகம்

vidivelli said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
செம்பகம்

தாருகாசினி said...

வருகைக்கு மிக்க நன்றிகள் செம்பகம்.:)

Post a Comment