Thursday, June 3, 2010

பாடும் நிலாவுக்கு ஒரு வாழ்த்து

மாதங்களில் சிறந்தது மார்கழி என்று சொல்வார்கள்.ஆனால் இந்த வைகாசி மாதத்தில் கூட பல விசேசங்கள் இருக்கிறது போல தெரிகிறது.இப்போது இணையத்தை மேயும்போது தான் அறிந்துகொண்டேன் எங்கள் பாடும் நிலாவின் பிறந்த நாள் ஜுன் 4 இன்று என.இசைஞானியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முற்றாக ஓய்ந்துவிடாத நிலையில் அடுத்த கொண்டாட்டம் இது.இசைஞானியின் இன்னிசைக்கு தன் இனிமையான குரலினாலும் அந்த குரலில் காட்டும் அற்புதமான நடிப்பாலும் மேலும் மெருகூட்டியவர் எங்கள் எஸ்.பி.பி அவர்கள்.



நடிப்புலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் என்றால் குரல் நடிப்பில் சூப்பர்ஸ்டார் எங்கள் எஸ்.பி.பி தான்.எத்தனை எத்தனை விதமான பாடல்கள் அந்த கின்னஸ் சாதனை மனிதரின் பெருமைகளை இங்கே எடுத்துச்சொல்ல எனக்கு அறிவும் போதாது பதிவில் இடமும் போதாது.


என் விருப்பப்பாடல்கள் பட்டியலில் பெரும்பான்மையானவை இவருடைய பாடல்கள் தான்.அதிலும் தேர்ந்தெடுத்த சில பாடல்களை இந்தப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.எங்கள் பாடும் நிலா நூறாண்டு காலம் வாழவேண்டும் என அவரின் அன்பு ரசிகர்கள் சார்பில் என் வாழ்த்துக்களை எங்கள் குரல்வேந்தனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பாடல்களுக்கு எந்த விளக்கமும் தராவிட்டாலும் கூட எஸ்.பி.பி யின் குரல் பாவங்களே அத்தனை விளக்கங்களையும் தந்துவிடாதா என்ன..

பிரியங்கா படத்திலிருந்து இசைஞானியின் அற்புதமான இசையில் "வனக்குயிலே"



ஏக் துஜே கேலியே படத்திலிருந்து லக்ஸ்மிகாந் பியரிலாலின் இனிய இசையில் "தேரே மேரே"



அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த பாடல் இது.இசை நிகழ்ச்சியில் அவர் பாடியதை இங்கே கேட்க தேரே மேரே

தென்றலே என்னைதொடு படத்திலிருந்து இசைஞானியின் இனிய இசையில் "கவிதை பாடு குயிலே"



மௌனராகம் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் "மன்றம் வந்த தென்றலுக்கு"

8 comments:

எல் கே said...

Happy Birthday to our anna SPB

Anonymous said...

Yah,This month is special, bec
June 2nd Ilhaijarah's + Manirathnam's birthday.
3rd, Fox Karunanithi's.(Not special)
4th, The great SPB's.

வந்தியத்தேவன் said...

பதமஸ்ரீக்கு பிறந்த‌நாள் வாழ்த்துக்கள். தேரே மேரே எனக்கு மிகவும் பிடித்த பாடல் காரணங்கள் சொல்லவேண்டுமா?

தென்றலே என்னைத் தொடு படத்தின் அனைத்துப் பாடல்களும் மெஹா ஹிட் கவிதை பாடு குயிலே காட்சி அமைப்பும் கலக்கல்.

தாருகாசினி said...

//தேரே மேரே எனக்கு மிகவும் பிடித்த பாடல் காரணங்கள் சொல்லவேண்டுமா? //

உங்கட தலைவரின்ர படம் உங்களுக்கு பிடிக்காம போகுமா என்ன..அது தானே அவரின் சின்ன வயசு படத்தை போட்டுவச்சிருக்கிறதிலயே விளங்குது..:)
இருந்தாலும் அருமையான பாட்டு தான்.

//தென்றலே என்னைத் தொடு படத்தின் அனைத்துப் பாடல்களும் மெஹா ஹிட் கவிதை பாடு குயிலே காட்சி அமைப்பும் கலக்கல். //

உண்மைதான் அண்ணா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

தாருகாசினி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் LK..

வந்தியத்தேவன் said...

http://www.youtube.com/watch?v=IEu6Ux1CEFw&NR=1

Tere Mere beachume

யசோதா.பத்மநாதன் said...

எப்படி இருக்கிறீங்க ஹாசினி? ஏன் பல மாதங்களாக ஒரு பதிவுகளையும் காணோம்? ஏதாவது எழுதுங்கோ!

எப்படி வீடியோக் காட்சிகளைப் பதிவேற்றுவது என்றாவது ஒரு பதிவு போடுங்கோ. படிப்படியாக விளக்கங்களோடு.புதிய பதிவர்களுக்கு அது பயன் படும்.எனக்கு அது எப்படிச் செய்வது என்று தெரியாது. தெரிந்து கொள்ள மிகுந்த ஆவல்.

பதிவை எதிர் பார்க்கலாமா?

உங்கல் நாட்கல் இனியதாகட்டும்!

தாருகாசினி said...

வீடியோ இணைக்கும் வழி இப்போது தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
முடிந்தளவு விரைவில் ஒரு பதிவு இடுகிறேன் தோழி.உங்கள் அன்புக்கு நன்றி...:)

Post a Comment