சிறு வயதிலிருந்தே வாசிப்பு எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகவே இருந்துவருகிறது.அதே போல் நிறைய எழுதவேண்டும் எனது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கொள்ளை ஆசை......பாடசாலையில் படிக்கும் காலத்தில் போட்டிகளில் பங்குபற்றி அந்த தாகத்தை ஓரளவு தீர்த்திருக்கிறேன்.பல்கலைக்கு வந்தபின்னர் அவ்வாறான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.வாய்ப்பு கிட்டவில்லை என்பதை விட கிடைத்த வாய்ப்புக்களை நான் சரிவரப்பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
எமது ஊரில் இருக்கும்போது எங்கள் மொழியின் அருமையை அதன் மேல் எங்களுக்கு உள்ள பற்றை நாங்கள் புரிந்துகொள்வதில்லை.(எனது அனுபவத்தை சொல்கிறேன்.உங்களுக்கு எப்படியோ தெரியாது).மாறாக பிற மொழி ஆதிக்கம் உள்ள இடத்துக்கு செல்லும்போது தான் அந்த அருமை எங்களுக்கு புரியும்.எமது மொழியில் யாராவது கதைக்கும்போது காதில் தேன் பாய்வது போல் இருக்கும்...இதை இலங்கையில் இருக்கும் நான் சொல்வதை விட வெளிநாடுகளில் குறிப்பாக எம்மவர் அரிதாக வாழும் இடங்களில் வசிப்பவர்கள் அதிகமாகவே உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்."சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா...எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?இந்த தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...".என்று சும்மாவா சொன்னார்கள்.
நேரம் கிடைக்கும்பொழுதில் எல்லாம் கூகிள் தேடலில் சென்று தமிழ் இணையத்தளங்களுக்கு சென்று பார்ப்பேன்....ஆயுள் முழுவதும் .வாசித்தாலும் இணையத்தில் உள்ள அத்தனை தமிழ் ஆக்கங்களையும் வாசித்து முடித்து விட முடியுமா என்று யோசித்து சலித்தே விட்டேன்.இணையம்,நாகரீகம் என்று உலகத்தின் அசுர வளர்ச்சியைக்கண்டு எங்கே எங்கள் தமிழ் அழிந்து விடுமோ என்று கலங்கியவர்களும் உண்டு தான்."தமிழ் இனி மெல்லச்சாகும்" என்ற கூற்று இரு பொருள்படும்.ஒன்று தமிழ் மெல்ல சாகும் மற்றையது தமிழ் மெல்ல அச்சாகும்....ஆம்..இன்றைய இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எடுத்து நோக்கும்போது எங்கள் தமிழ் அச்சாகிவிட்டது வெளிப்படை உண்மை.
இந்தப்பெரிய உலகத்தில் தமிழ் பேசும் அத்தனை நெஞ்சங்களுடனும் எனது உணர்வுகளைப்பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் எமக்கென்று ஒரு சின்னக்கூட்டில் என் நண்பர்களோடு என் படைப்புக்களை பகிர்ந்துகொள்வதில் அளவில்லா ஆனந்தம் அடைகிறேன்.......
Thursday, February 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எங்களுக்கும் உங்களுக்கும் தமிழ் படிப்பித்த நாளினி ஆசிரியரும் தமிழை நாங்கள் எல்லாரும் நேசிக்க காரணமாக இருந்தவர். அவர் எங்களுக்கு படிப்பதற்கு மட்டுமல்ல நல்ல பிள்ளைகளாக வாழவும் வழிகாட்டியவர். நாங்கள் தான் ஒன்றையும் பின்பற்றவில்லை.தொடர்ந்து எழுதுங்கள் ...
எழுத்தில் நீங்கள் முதுமை அடைத்தவுடன் (வயதில் எப்பவோ அடைந்து விட்டீர்கள்) சமுதாய விழிப்புணர்வு சம்பந்தமாக எழுதுங்கள்
//"தமிழ் இனி மெல்லச்சாகும்" என்ற கூற்று இரு பொருள்படும்.ஒன்று தமிழ் மெல்ல சாகும் மற்றையது தமிழ் மெல்ல அச்சாகும்...//
ரசிக்கும்படியாக இருக்கிறது உங்கள் எழுத்து..தொடர வாழ்த்துக்கள்..
கருத்துக்கு நன்றிகள் நதியானவள். அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க .......:)
ROY அண்ணா..வருகைக்கு நன்றிகள் :)
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
செம்பகம்
கருத்துக்கு நன்றிகள் செம்பகம்...
Post a Comment