நாம் வீதியால் செல்லும்வேளையில் சிலபேரைப்பார்க்கும்போது அறிமுகமில்லாதவராக இருந்தாலும் கூட ஏற்கனவே இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்படுவதுண்டு...பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்வார்கள்.ஆண்கள் சிலர் பெண்களைக்கவிழ்ப்பதற்கு இதை உத்தியாக பாவிப்பதுமுண்டு...;).சரி இந்தக்கதை ஏன் இங்கே?....ஆம்..சில பாடல்களைக்கேட்கும்போது எனக்குள் அதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது...அது என்ன பூர்வஜென்ம பந்தமா???இல்லை..:)...இசைஞானியின் பாடல் ஒருவரி தன்னிலும் எங்கேயாவது கேட்டிருந்தாலும் அந்த இசை மனதில் ஆழமாகப்பதிந்திருக்கும்...திரும்ப ஒருமுறை கேட்கும்போது ஏற்கனவே கேட்ட உணர்வு ஏற்படும்....அது தான் உண்மை..என்னைப்பொறுத்தவரை...
பாடல்களை தத்துவப்பாடல்கள்,காதல் பாடல்கள்,இசைப்பாடல்கள்,சோகப்படல்கள் என்று பலவாறாக வகைப்படுத்தலாம்.....இந்தப்பதிவில் இசைப்பாடல்கள் சிலவற்றை தொகுத்து
தரலாம் என்று நினைக்கிறேன்....
இந்த பாடலைக்கேட்கும்போது "இன்னுமொரு பிறவி வேண்டும் இறைவா...அதிலாவது இசையோடு வாழ்கின்ற இசைக்காகவே வாழ்கின்ற பாக்கியம் வேண்டும்" என்று நினைத்துக்கொள்வேன்...இசைஞானம் என்பது நாம் கற்று தெரிந்துகொள்வது என்பதைவிட பிறப்பிலேயே கூட வருவது என்பது தான் எனது கருத்து.....கற்பதன் மூலம் அதை நாம் மேலும் மெருகூட்டி கொள்ளலாம்...இந்த பாடலின் ஒவ்வொரு வரியுமே அர்த்தமுள்ள ஆழமான வரிகள்....
உயிர் பிறந்திடுமுன்னே ஒலியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்றபோதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசைதானே புரிந்துபாடு மனிதா...
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பதென்ன எளிதா....
பாடல் ஆரம்பத்தில் ஜேசுதாஸ் அவர்கள் ஆலாவை பாடிமுடித்து எஸ்.பி.பி "அருவி கூட.." என தொடங்க முதல் புல்லாங்குழல் இசையோடு நதியின் சலசலப்பையும் சேர்த்து என்று தொடக்க இசையையே இசையமைப்பாளர் இனியவன் பிரமாதமாக வழங்கியிருப்பார் பாருங்கள்..இந்த பதிவை வெளியிடும் இறுதி தருணம் வரைக்கும் இந்தப்பாடலின் இசை
இசைஞானியுடையது என்றே நம்பிக்கொண்டிருந்தேன்....கர்நாடக சங்கீதம் என்ற பலமான அடிப்படையோடு தமிழ் இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்...பொறியியலாளராக இருந்து அடிப்படை இசைஞானத்துடன் இசை உலகுக்கு வந்து இமயத்தைத்தொட்டவர் எஸ்.பி.பி அவர்கள்...ஆகவே தனிப்பட்ட ரீதியில் கூட அவர்கள் இருவருக்கும் மிகவும் பொருந்தக்கூடிய பாடலே.....பாடல் இடம்பெற்ற படம் கூட "கௌரிமனோகரி"என்ற அழகான இராகத்தின் பெயரிலேயே வருகிறது...(படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை..:))
இசையின் இரண்டு துருவங்கள் இணைந்து கலக்கிய இந்தப்பாடல் எம் உள்ளத்தை கவர்ந்து செல்வதில் அதிசயம் எதுவும் இல்லை தானே...
இசையின் பெருமையைக்கூறும் இன்னொரு பாடல் இது....இசைஞானியின் அற்புதமான இசையமைப்பில் வெளிவந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்......
நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்ற போதும்
அந்த தீயே வெந்து போகும்
வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
வாழும் லோகம் ஏழும்
எந்தன் பாடல் சென்று ஆளும்
இசைஞானியின் பாடல்களில் பெரும்பாலானவற்றை எடுத்துக்கொண்டால் இசையில்
வீணைக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பார்.இந்தப்பாடலிலும் ஒலிக்கும் அந்த வீணை இசை பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துச்செல்கிறது....
அருமையான குரல் வளம் படைத்தவர் மட்டுமல்ல எந்தப்பாடலையும் அதற்குரிய உணர்ச்சி பாவங்களைக்கொடுத்துப்பாடுவதில் என்னை பொறுத்தவரை எஸ்.பி.பி க்கு நிகர் அவரே தான்..இந்தபாடலிலும் அதை நாம் அனுபவித்து உணரலாம்.
இந்தப்பாடலும் இசைஞானியின் அற்புதமான இசையில் எஸ்.பி.பி அவர்களின் இனிய குரலில் அமைந்த ஓர் பாடல் தான்.
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
எந்தன் மூச்சும் இந்தப்பாட்டும்
அணையா விளக்கே...
என்றவாறான அற்புதமான வரிகளைக்கொண்ட பாடல் இது....
5 comments:
//அருமையான குரல் வளம் படைத்தவர் மட்டுமல்ல எந்தப்பாடலையும் அதற்குரிய உணர்ச்சி பாவங்களைக்கொடுத்துப்பாடுவதில் என்னை பொறுத்தவரை எஸ்.பி.பி க்கு நிகர் அவரே தான்// ...
உண்மைதான். எனக்கும் எஸ்.பி.பி யை பிடிக்கும். அத்துடன் உங்கள் தெரிவு பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்களே. (ஆனால் என்ன....உங்களை போல் சங்கீத ஞானம் என்னிடம் இல்லை.)
நல்லா பாட்டு மட்டும் கேக்கிறிங்க எண்டு மட்டும் விளங்குது
///நாம் வீதியால் செல்லும்வேளையில் சிலபேரைப்பார்க்கும்போது அறிமுகமில்லாதவராக இருந்தாலும் கூட ஏற்கனவே இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்படுவதுண்டு...பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்வார்கள்.ஆண்கள் சிலர் பெண்களைக்கவிழ்ப்பதற்கு இதை உத்தியாக பாவிப்பதுமுண்டு...;///
அட இவ்வளவு சுலபமான வழியும் இருக்கா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அர்ச்சனா...ம்ம்...என்னுடைய அபிமான பாடகர் ஆண்களில் அவர் தான்....
//ஆனால் என்ன....உங்களை போல் சங்கீத ஞானம் என்னிடம் இல்லை.//
நீங்கள் நினைப்பது போல் இசைஞானம் எல்லாம் எனக்கு இல்லை...:)ஆனால் நல்ல ரசிகை நான் .....பாட்டு என்றால் உயிர் எனக்கு....
//நல்லா பாட்டு மட்டும் கேக்கிறிங்க எண்டு மட்டும் விளங்குது//
மூச்சு விடாம இருந்த நாள் வேணுமண்டா இருக்கலாம் ஆனா பாட்டு கேக்காம இருந்த நாள் இல்லை எனக்கு....அப்பிடி ஒரு பைத்தியம் நான் :) ....
//அட இவ்வளவு சுலபமான வழியும் இருக்கா///
இதெல்லாம் தெரியாட்டி வாழ்நாளில பாதிய வீணாக்கிட்டீங்க போங்க....;)
Post a Comment