Saturday, May 15, 2010

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

எனது முந்தைய பதிவு ஒன்றில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது பற்றி எழுதியிருந்தேன்.இந்தப்பதிவில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான
வழிமுறைகளை பற்றி குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.இந்த மன அழுத்தம் என்பது உறவுகளினால் வரலாம்..அலுவலகத்தில் கூட வேலை
செய்பவர்களால் ஏற்படலாம்..எதுவாயிருந்தாலும் மன அழுத்தம் குறிப்பிட்ட அளவைத்தாண்டும்போது அதுவே பல நோய்களுக்கு காரணமாவது மட்டுமல்ல மனிதனை மன நோயாளியாகவே மாற்றிவிடக்கூடும்.
ஒரு நாள் என் அலுவலக நண்பி ஒருத்தி சொன்னார் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தினமும் குத்துச்சண்டை பயிற்சி செய்வது போல் செய்வாராம்..ஏனென்று கேட்டால் மன அழுத்தத்தை குறைப்பதற்காக என்று...அதனை செய்து பார்த்ததில்லை என்றாலும் கூட அதன் பயனை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது...ஆண்களுக்கு இது மிகவும் பொருத்தமான வழி முறை என்பது எனது கருத்து..

அதனை விட மன அழுத்தத்தை குறைப்பதற்கு நான் எப்போதும் கடைப்பிடிக்கும் வழிகளில் ஒன்று வாய் விட்டு அழுவது தான்.அழுபவன் கோழை என்று நீங்கள் சொல்லக்கூடும்.மற்றவர்களுக்கு முன்னால் அழவேண்டும் என்ற அவசியம் இல்லை.மற்றவர்களுக்கு முன்னால் அதனை செய்யும்போது அவர்களுக்கு சங்கடமாக கஸ்டமாக இருக்கக்கூடும்.அதனால் தனிமையில் அதற்கேற்ற நேரம் காலம் பார்த்து நடைமுறைப்படுத்துவது நன்மைபயக்கும் என்று நினைக்கிறேன்....:).நான் இங்கே சொல்லும் கருத்தை மெய்ப்பிப்பது போல் ஒரு காட்சி "மொழி" படத்தில் இடம்பெற்றிருந்தது அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.
இறுதியாக நான் குறிப்பிடும் இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.பொதுவாக குத்துப்பாடல்கள் கேட்கும்போது தான் ஆடத்தோன்றும் என்று எல்லோரும் சொல்வார்கள்.நான் அதில் விதிவிலக்கோ என்னவோ தெரியவில்லை..மனசுக்கு இதமான சில
மெல்லிசைப்பாடல்களைக்கேட்கும்போது கூட ஆடவேண்டும் போல் தோன்றும்.இயல்பாக எந்த நோக்கமும் இன்றி தான் அவ்வாறு ஆட ஆரம்பித்தேன்..ஆனால் உண்மையிலேயே கவலையை நீக்குவதில் மன அழுத்தத்தை குறைப்பதில் இசைக்கலையைப்போல் நடனக்கலைக்கும் கூட பெரிய பங்கு இருக்கிறது...மன அழுத்தம் குறைவது மட்டுமல்ல உடற்பயிற்சி நிலையம் செல்லாமலே உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் இது அமையும்..நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.அதை விட முக்கியமான அனுகூலம் பெண் பார்க்க வருபவர்கள் பெண்ணுக்கு ஆடத்தெரியுமா என்று கேட்டால் முழிக்க வேண்டிய அவசியமில்லை..;)(பெண்களுக்கு கூட பொருத்தமாக இருக்கும்:))

11 comments:

கானா பிரபா said...

மன அழுத்தம் வந்தாலே எல்லாம் காலி தானே.

மசக்கவுண்டன் said...

நல்ல கருத்துக்கள்.

தாருகாசினி said...

கானா பிரபா
//மன அழுத்தம் வந்தாலே எல்லாம் காலி தானே.//

காலியாகாமல் இருக்கத்தானே எப்பிடி எப்பிடி எல்லாம் முயற்சி செய்கிறோம்.

முதன் முதலா குடில் பக்கம் வந்திருக்கிறியள்..ஆலாத்தி எடுத்து வரவேற்பமெண்டா சோடிக்கு ஆள் கிடைக்கேல்ல....;)வருகைக்கு நன்றிகள் பாஸ்..:)

மசக்கவுண்டன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...:)

Anonymous said...

useful thing

தாருகாசினி said...

//useful thing //

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..:)

S Maharajan said...

நல்ல கருத்துக்கள்.

தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தல மகராஜன்..:)

Classof1 said...

Thank You so much for your nice advice

abirami said...

I am also try

abirami said...

I am also try

abirami said...

naan muyarchi seiran enaku nallaa theyrium

Post a Comment